Saturday, October 24, 2009

ஆன்லைன் பி.ஜே

1 comment:

  1. இஸ்லாத்திற்கு மாபெரும் வெற்றி
    அல்லாஹ்வின் அருளால் கடவுள் மறுப்புக் கொள்கை உடையவர்களுடன் தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய விவாதத்தில் அல்லாஹ் மாபெரும் வெற்றியைத் தந்தான்.இறைவன் இருக்கிறானா? இப்பேரண்டம் தானாக உருவாகியதா? இதைப் படைத்தவன் ஒருவன் இருக்கின்றானா என்ற தலைப்பில் விவாதிக்க வந்தவர்கள் இறைவன் இல்லை என்ற தங்களின் நிலையை நிரூபிக்க முடியவில்லை. மாறாக நம் தரப்பில் எடுத்து வைத்த வாதங்களுக்கும் அறிவுப்பூர்வமான கேள்விகளுக்கும் பதில் கூற முடியாத நிலையில் இறைவன் இருக்கிறானா இல்லையா என்பது கேள்விக்குறி தான் என்று இறங்கி வந்து தங்கள் வாய்களால் வாக்கு மூலம் கொடுக்கும் அளவுக்கு அவர்களின் நிலை மாறியது.இரண்டாம் தலைப்பு திருக்குர்ஆன் முஹம்மது நபி எழுதியது அல்ல என்பதற்கு ஆதாரமாக நம் தரப்பில் அடுக்கடுக்கான சான்றுகள் வைக்கப்பட்டன. அவற்றுள் ஒன்றுக்குக் கூட அவர்கள பதில் சொல்லவில்லை. ஆனால் அவர்கள் தரப்பில் எழுப்பிய ஒரு கேள்விக்குக் கூட நாம் பதில் சொல்லாமல் விடவில்லை.பெரியார் ஒரு சிந்தனையாளர் அல்லர். அவரிடமும் பகுத்தறிவாளர்கள் எனத் தம்மைப் பற்றி சொல்லிக் கொள்வோரிடமும் எந்தப் பகுத்தறிவும் இல்லை என்று அவர்களின் நூலகளில் இருந்தே தக்க ஆதாரங்கள் எடுத்துக் காட்டப்பட்ட போது அவர்களின் மூட நம்பிக்கையும் அறியாமையும் மிகத் தெளிவாக அமபலமானது.விவாதத்தில் நேரடியாகப் பங்கு கொண்டவர்கள் பற்றி வீடியோவில் பார்த்து நீங்கள் அறிந்து கொள்ளலாம். அறிவியல் தொடர்பான விபரங்களுக்கான ஆதாரங்களைத் தேடித் தருவதிலும் புரஜக்டரில் எடுத்துக் காட்டுவதிலும் பெரும்பங்காற்றியவர் மேட்டுப்பாளையம் கனி (பெங்களூர் டிஎன்டிஜெ தலைவர்) இரண்டு நாட்கள் முன்பே வந்து முழுமூச்சாக பாடுபட்டார். அது போல் உலகம் முழுதும் இந்த விவாதத்தை நேரடியாகக் காண்பதற்கு உழைத்த நமது வெப் மாஸ்டர் அப்பாஸ் அவர்களின் உழைப்பும் ந்ன்றிக்குரியது.முஸ்லிம்கள் என்றால் முட்டாள்கள் என்றும் சிந்தனையற்றவர்கள் என்றும் கருதிக் கொண்டிருந்த ஒரு கூட்டத்தினர் முன்னிலையில் இது முறியடிக்கப்பட்டது. பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக் கொள்வோரை விட அறிவியல் அறிந்தவர்கள் சிந்தனையாளர்கள் முஸ்லிம்களே என்ற பெருமையை இந்தச் சமுதாயத்துக்கு வழங்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

    ReplyDelete